December 6, 2025, 6:11 AM
23.8 C
Chennai
Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்ஏழு வருடங்களுக்குப் பிறகு... மதுரை விளாச்சேரி பகுதியில் நடைபெற்ற குதிரை எடுப்பு திருவிழா!

ஏழு வருடங்களுக்குப் பிறகு… மதுரை விளாச்சேரி பகுதியில் நடைபெற்ற குதிரை எடுப்பு திருவிழா!

-

  • ஏழு வருடங்களுக்குப் பிறகு மதுரை விளாச்சேரி பகுதியில் நடைபெற்ற குதிரை எடுப்பு திருவிழா
  • 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு.

மதுரை திருநகர் உள்ள விளாச்சேரி பகுதியில், ஸ்ரீ அழகு நாச்சியார் அம்மன் மற்றும் ஸ்ரீ அய்யனார் கோவில் அமைந்துள்ளது.

விளாச்சேரி பகுதியில், ஸ்ரீ அழகு நாச்சியார் அம்மன் மற்றும் அய்யனார் கோவில் மிகவும் விசேஷமான ஒன்று. இந்தக் கோவிலின் 34 ஆம் ஆண்டு குதிரை எடுப்பு மற்றும் புரட்டாசி பொங்கல் விழா இன்று நடைபெற்றது.

இத்திருவிழாவில் விளாச்சேரி சுற்றியுள்ள  கிராமத்தில் உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு, நேர்த்திக்கடன்  வேண்டி குதிரை எடுத்தனர்.

சாமி குதிரையின் முன்னர், முதியவர்கள் இளம் பெண்கள், ஆண்கள் ஆட்டம் ஆடி 15க்கும் மேற்பட்ட குதிரைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.


மதுரை மாவட்டம், அவனியாபுரம் அருகே வெள்ளக்கல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மந்தையம்மன் திருக்கோவில் புரட்டாசி பொங்கல் விழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

இவ்விழாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் காப்புகட்டி அக்னிசட்டி, பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சியாக வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரி கரைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில், பெண்கள் ஏராளமானோர் நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று அயன்பாப்பாகுடி கண்மாயில் முளைப்பாரியை கரைத்தனர். விழா ஏற்பாடுகளை, ஊர் பொதுமக்கள் கிராம பெரியோர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

- Advertisment -