Homeஉள்ளூர் செய்திகள்வீழ்வேனென்று நினைத்தாயோ! நான் சென்னை., அமைச்சர் வேலுமணியின் ட்ரெண்டிங் ஹேஷ்டாக்!

வீழ்வேனென்று நினைத்தாயோ! நான் சென்னை., அமைச்சர் வேலுமணியின் ட்ரெண்டிங் ஹேஷ்டாக்!

velumani

கொரோனா காலத்தில் வல்லரசு நாடுகளும், நல்லரசு நிர்வாகங்களும் கொடூர வைரசிலிருந்து தங்களது மக்களை காக்க கேடயங்களாக செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசின் வழிகாட்டுதலை ஏற்று தமிழ்நாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசும், கொரோனா வைரஸ் பரவியது முதல், தற்போது வரை முழு வீச்சில் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனாலும், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள், உயிரை பணயம் வைத்து கொரோனா வாரியர்ஸாக களப்பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், சுகாதார மற்றும் வருவாய் துறையினர் உள்ளிட்டவர்களை இழிவு படுத்துகின்றன. அவர்களின் மன உறுதியை குலைக்கும் வகையிலும், அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் நாள்தோறும் எதிர்கட்சிகள் வசை பாடுகின்றன. இவர்கள் கிளப்பும் பீதியால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கிளம்பும் கூட்டம் அதிகரித்து வருகிறது.

ஏதோ சென்னை தான் இந்த நோய் தொற்றின் பிறப்பிடம் என்று இவர்கள் கட்டுக்கதை பரப்பி , தலைநகரில் வசிக்கும் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். இத்தருணத்தில் அனைத்து மாவட்ட மக்களையும் அன்னையாக அரவணைக்கும் சென்னை, பேரிடரிலும் பெருந்துயரத்திலும் மீண்டெழுந்ததே வரலாறு என்ற எழுச்சிமிகு பெருமையை எல்லோருக்கும் உணர்த்த நான் சென்னை, வீழ்வேனென்று நினைத்தாயோ என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குரல் கொடுக்கிறார்.

தமது ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களிலும், www.namakaaga.com என்ற இணையதளம் வாயிலாகவும் வீழ்வேனென்று நினைத்தாயோ என்ற பெயரில் இப் பேரிடரிலிருந்து சென்னை மீண்டெழும் என்பதை உணர்த்த, சென்னையின் பெருமைகளை தினமும் தெரிவித்து வருகிறார். அதில், மானுட குலமே நித்தம் எதிர்த்து போரிடும் மருந்தில்லா மனித சக்தியை விஞ்சி நிற்கும் ஒரு கொடுந்தொற்று ஏதோ சென்னைக்கு மட்டுமானதாக உருவகித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின், அல்லும் பகலும் அயராது உழைக்கும் ஒட்டு மொத்த அரசு இயந்திரத்திற்கும், சென்னைவாழ் மக்கள் பலரின் மனஉறுதிக்கும் ஊறு விளைவித்து வீழ்த்திவிடலாம் அதில் அரசியல் செய்யலாம் என்கிற கனவோடு, சென்னையை நோய்த்தொற்று நகரமாக சித்தரித்து கடுஞ்சொற்களால் அவமதித்து தூற்றி ஏளனம் செய்வோர், ஈவு இரக்கமில்லா கல்நெஞ்சக்கார அரசியல் அரக்கர்கள் என்று அவர் கடுமையாக சாடியிருக்கிறார்.

காலம் காலமாக சென்னையை அன்னையாக கொண்டோர் பலர் அறிவர். வீழ்தல் வரலாறு சென்னைக்கானதன்று என்று!

ஒரே ஓரு நாளில் முடியும் போரல்ல கொரோனாவிற்கு எதிரான இந்தப்போர் என்பது அனைவரும் அறிந்ததே.ஆனாலும், அரசுக்கும் மக்களுக்கும் இடர் விளைவிக்கும் மாபாதக அருவருப்பு அரசியல் செய்யும் சிலருக்கு, இது தெரியாதா என்ன!? என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

மனித குலமும் மருத்துவ குலமும் மன உறுதியிழக்காது உயிர்கொல்லி நோய் தொற்றுக்கெதிராக புரியும் போர், நீண்ட நெடிய மாபெரும் உலகப்போர் என்றும் இவர்களுக்கு தெரியாதா என்ன!? தெரிந்தும் நித்தம் குறைகூறி அவர்களது இருப்பை காட்டும் வெறுப்பரசியல் கணைகளை மாநகர் சென்னை மீது எத்தனை வீசினாலும், அரசின் அனைத்து முயற்சிகளாலும் அல்லும் பகலும் உழைக்கும் அத்துணை சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி களவீரர்கள் உதவியுடனும் மக்கள் ஒத்துழைப்பை பெற்று மாவீரனாய் மாநகர் சென்னை “நான் சென்னையடா” என்று நெஞ்சை நிமிர்த்தி கொரோனா நோய்க்காலம் கடந்து மீண்டு வருவான் என்று சென்னை மக்களின் மன உறுதியை கம்பீரமாக பறைசாற்றி, அவர்களின் கரங்களை அமைச்சர் எஸ்.பி வேலுமணி வலுப்படுத்தியிருக்கிறார்.

அது மட்டுமில்லை சென்னை நகரம் உருவானது முதல் இந்நாள் வரை சந்தித்த சரித்திர சாதனைகள், பேரழிவுகள், பெருந்துயரங்களை அஞ்சாது எதிர்கொண்ட சென்னை மக்களின் நெஞ்சுரத்தையும் அசத்தலாக பதிவிட்டு வருகிறார். எதனையும் வென்ற சென்னை , இதனையும் வெல்லும் என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவிக்கும், ஒவ்வொரு பதிவுகளும், சென்னை வாசிகளுக்கு புதுத்தெம்பை அளித்திருக்கிறது..

சென்னையே தன் மீட்டுருவாக்க வரலாற்றில் எதிர்கொண்ட பசி, பட்டினி, பல நோய்தொற்றுகள், போர் குண்டுகள், படையெடுப்பு, புயல், சுனாமி, பெருவெள்ளம் என்று போன்ற சவால்களை எப்படியெல்லாம் வென்று மீண்டேனே அப்படியே கொரோனா என்கிற கொடிய நோய் தொற்றையும் ஒரு நாள் வெல்வேன் என்று பேசுவதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் இந்த முழக்கங்கள் உள்ளன. இதுவரை யாரும் செய்யாத அளவிற்கு வித்தியாசமான அணுகுமுறையில் மக்களுக்கு மன உறுதியை அளிப்பதாக இருக்கின்றன என்று சென்னைவாசிகள் பெருமிதம் கொள்கின்றனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,140FansLike
376FollowersFollow
67FollowersFollow
74FollowersFollow
2,856FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

ஆஸ்கர் விருது கலை அறிவியல் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யா..

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்புவிடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர்...

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவுக்கு பலி..

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நுரையீரல்...

அஞ்சலி-பூ படத்தில் அறிமுகமான குணச்சித்திர நடிகர் ராமு காலமானார்..

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர்...

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

Latest News : Read Now...