சென்னை: சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை வெட்டிய கும்பல்! சிசிடிவி காட்சிகள்!

Published:

Screenshot 2020 0806 150433 - 2026

சென்னை அயனாவரத்தில் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை வெட்டிவிட்டு தப்பி சென்ற 3 மர்ம நபர்களை சிசிடிவி உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அயனாவரம், பாளையம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் சரவணன் என்கின்ற சதீஸ். இவர் கோபிகிஷ்ணா திரையரங்கம் அருகே ஆதவன் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் ஒன்றினை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று மாலை சூப்பர் மார்க்கெட்டுக்கு தேவையான சரக்குகளை வாகனத்திலிருந்து இறக்கி கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்கள் சரவணனை கத்தியால் சரமாரியாக வெட்டினர். நிலைதடுமாறிய சரவணன், பின்னர் சுதாரித்து கொண்டு அவர்களை எதிர்த்து தாக்க முயற்சி செய்தார்.

மேலும் அருகில் இருந்த கடையில் வேலை பார்க்கும் ஆட்களும் மர்ம நபர்களை மடக்கிப்பிடிக்க முற்பட்டனர்.

ஆனால் இளைஞர்கள் 3வரும் கத்தியை காண்பித்து தப்பித்து சென்றனர். தற்போது இந்த சிசிவிடி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனைத்தொடர்ந்து அயனாவரம் போலீசார் சிசிடிவி உதவியுடன் தப்பி சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img