கடித்தது தெரியாமல் செல்போனில் விளையாட்டு! கையில் பாம்போடு மருத்துவமனை வந்த சிறுவன்!

சற்றுமுன் தமிழகம்
boy 1
boy 1

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எம்.குண்ணத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கபாலன் மகன் மணிகண்டன் வயது 16 என்ற சிறுவன் அதே ஊரைச் சேர்ந்த சில சிறுவர்களுடன் சேர்ந்து கிராமத்தில் உள்ள கோவில் படிக்கட்டில் செல்போனில் விளையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது நீர் விரியன் பாம்பு ஒன்று ஊர்ந்து வந்து மணிகண்டனின் இடது காலின் பாதத்தின் அருகே கடித்து விட்டது. ஆனால் சிறுவனுக்கு பாம்பு கடித்தது தெரியாமல் செல்போனில் தீவிர கேம் விளையாடினார்.

சிறுவனுக்கு பாம்பு கடித்த இடத்தில் வலிக்க ஆரம்பித்ததும் கேம் விளையாடியதை நிறுத்தி விட்டு காலை பார்த்தபோது தான் தனக்கு பாம்பு கடித்து விட்டது என்று தெரிந்தது.

snake
snake

உடனே அருகில் இருந்த நீர் விரியன் பாம்பை கையில் பிடித்து கொண்டே உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மணிகண்டனின் உறவினர் பைக்கில் விரைந்து அழைத்து வந்தனர்.

கடித்த பாம்போடு அரசு மருத்துவமனைக்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் சிறுவனுக்கு முதலுதவி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.