
வயதான மூதாட்டி ஒருவர், கண் தெரியாமல் பசியில் தவித்த போது அவருக்கு நேர்ந்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கண்பார்வை குறைபாடு உள்ள மூதாட்டி ஒருவர், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருந்துள்ளார்.
பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்துள்ள இவர், கடந்த 2 நாட்களாக ரயில் நிலையம் எதிரேவுள்ள மரத்தடியில் பசி, பட்டினியோடு நடக்க முடியாமல் படுத்துக் கிடந்துள்ளார்.
இந்நிலையில், அங்கிருந்த சிலர், மரத்தடியில் கிடந்த மூதாட்டியை, தூக்கிச் சென்று அருகில் உள்ள ஆனந்தவல்லி வாய்க்காலுக்குள் ஆடையில்லாமல் போட்டுச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, அந்த வழியாக சென்ற பொதுமக்கள் புதர் மண்டிய வாய்க்காலுக்குள் மூதாட்டி ஒருவர் ஆடை இல்லாமல் பிணமாக கிடப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.
பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மூதாட்டியை மீட்ட போது அவருக்கு உயிர் இருந்தது தெரியவந்தது.
இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த போலீசார், மூதாட்டியை மீட்டு அருகில் உள்ள மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, மூதாட்டியை யார் வீசியது, எதற்காக வீசினார்கள், ஆடை இல்லாமல் இருப்பதால் கற்பழிக்க பட்டிருகலாமா? என்ற பல கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.



