
பேனர்தானே கூடாது… அலங்கார வளைவு வைக்கலாம்ல… என்று திமுக., வினர் வைத்த அலங்கார வளைவு திடீரென சரிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இடைத் தேர்தல் நடக்கும் விக்கிரவாண்டியில் திமுக., தீவிர பிரசாரம் செய்து வந்தது. இந்தத் தொகுதிக்கு உட்பட்ட துறையூர் – வழுதாவூர் சாலையில் திமுக., தலைவர் ஸ்டாலினை வரவேற்க அக்கட்சி சார்பில் அலங்கார வரவேற்பு வளைவு ஒன்று வைக்கப் பட்டிருந்தது.
இந்த வளைவு திடீரென சரிந்து விழுவதும், அப்போது கார் ஒன்று அதனைக் கடந்து செல்வதுமான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக., பிரமுகர் வைத்த பேனர் காற்றில் சரிந்து விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இந்த விவகாரம் குறித்து திமுக., அரசியல் ரீதியாக இந்த விவகாரத்தை அணுகியது.
இந்நிலையில், திமுக.,வினர் வைத்த அலங்கார வளைவு சரிந்து விழுவதும், அப்போது கார் ஒன்று விருட்டெனக் கடந்து சென்று தப்பியதும் பரபரப்பாகி உள்ளது.



