குளித்து விட்டு பாத்ரூமிலிருந்து வெளியே வந்த பெண்.‌. தவறாக நடந்த தலைமை காவலர்!

Published:

Screenshot_2020_0812_163359

சென்னை பெரம்பூர் பகுதியில் பெண் ஒருவரிடம் தகாதமுறையில் நடக்க முயற்சித்ததாக போக்குவரத்து தலைமைக்காவலர் ஒருவர் மேல் புகாரெழுந்துள்ளது. சென்னை பெரம்பூர் ரமணா நகர் பகுதியில் சுப்ரமணியன் கோயில் தெருவை சார்ந்த கலையரசி, கண்ணன் என்பவரின் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த நிலையில், அந்த வீட்டின் உரிமையாளர் கண்ணன் கலையரசியிடம் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது.

இதுகுறித்து கலையரசி செம்பியன் காவல்துறையிடம் புகாரளித்தார்.

அந்த புகாரில், ‘குளியறையிலிருந்து குளித்துவிட்டு வெளியேறியபோது கண்ணன் தன் கையப்பிடித்து இழுத்து தவறாக நடக்க முயற்சி செய்ததால் பக்கத்துவீட்டில் தஞ்சமடைந்தேன். இதுபற்றி என் கணவரும், மாமியாரும் கண்ணனிடம் கேட்க சென்றபோது கண்ணன் அவர்களை தாக்கிவிட்டார்.

bath

பக்கத்து வீட்டினரிடமும் அவர் தவறாக நடந்துகொண்டிருக்கிறார். காவல்துறையில் பணியாற்றும் காரணத்தால், ‘என்னை எதுவும் செய்ய முடியாது’ என கூறி மிரட்டல்விடுக்கின்றார்.’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கண்ணன் வேப்பேரி போக்குவரத்து காவல்நிலையத்தில் தலைமைக்காவலராக பணிபுரிந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Related articles

Recent articles

spot_img