சாரணர் அமைப்பு தலைவராக எச்.ராஜாவா? ஸ்டாலின் கண்டனம்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

சென்னை:

சாரண – சாரணியர் அமைப்பின் தலைவராக எச்.ராஜாவை நியமிக்க அதிமுக அரசு முயற்சி செய்துவருவதாகக் கூறிய திமுக., செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், பாஜக., வைச் சேர்ந்த எச்.ராஜாவை சாரண சாரணியர் இயக்க தலைவராக நியமிக்க அதிமுக., அரசு முயற்சி செய்து வருவதாகக் கூறி அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமியும் கல்வி அமைச்சர் செங்கோட்டையனும் இதற்கான பின்னணியில் உள்ளனர் என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.

ஹெச்.ராஜாவை நியமிக்கும் முயற்சி நடுநிலையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறிய ஸ்டாலின், தமிழக மாணவர்களிடம் காவிக் கொள்கையை புகுத்த பாஜக அரசு நினைக்கிறது என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.