நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிப்பு: அதிகாரபூர்வமாக அறிவிப்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷாலின் மனு முதலில் நிராகரிக்கப் பட்டது.

விஷாலை முன்மொழிந்த இருவரின் கையெழுத்து தவறாக இருப்பதாக வேட்புமனு நிராகரிப்பட்ட நிலையில், பின்னர் வேட்புமனு ஏற்கப் பட்டது. தனக்கு ஆதரவாக முன்மொழிந்த இருவரை ஆளும் கட்சியினர் மிரட்டும்

ஆடியோ ஆதாரத்தை விஷால் வெளியிட்டார். மேலும், சாலையில் அமர்ந்து தர்ணா செய்தார். பின்னர் காவலர்கள் துணையுடன் தேர்தல் அலுவலரை சந்தித்து அந்த ஆடியோவை அளித்தார். இதனை முழுமையாக ஆராய்ந்த பின்னர் விஷாலின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.
ஆனால், அந்த இருவரும் மீண்டும் நேரில் ஆஜராகி, தாங்கள் அப்படி எல்லாம் முன்மொழியவில்லை என்று தேர்தல் அலுவலர் வேலுச்சாமியிடம் கூறினர். இதை அடுத்து, விஷால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக அலுவலர் வேலுச்சாமி கூறினார். இதனால் மதியம் முதல் நிலவிய பரபரப்பு இரவு வரை நீடித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.