திமுக பிரமுகர் வெட்டிக்கொலை! தீவிர விசாரணையில் போலீஸார்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை
murder-2-1
murder-2-1

சென்னையில் திமுக பிரமுகர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்பல் திடீர் நகர் 3வது தெருவை சேர்ந்த கணேசன் (56). திமுக வட்ட துணை செயலாளராக இருந்து வந்தார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு அவர் வீட்டில் இருந்த போது பயங்கர ஆயுதங்களுடன் மர்ம கும்பல் ஆட்டோவில் வந்து இறங்கியது.

பின்னர், அவரை வெளியே இழுத்து வந்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதனையடுத்து, அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இந்த கொலை தொடர்பாக சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ரியல் எஸ்டேட் விவகாரம் தொடர்பாக கொலை நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.