இது உங்கள் சொத்து.. வடிவேலு பாணியில் அரசு பேருந்தை கடத்திச் சென்ற நபர்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை
Chennai-bus-1
Chennai-bus-1

கோயம்பேட்டில் இருந்து அண்ணா சதுக்கம் செல்லும் அரசு மாநகர பேருத்தை மர்ம நபர் கடத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வடிவேலு ஒரு படத்தில் இது உங்கள் சொத்து என எழுதப் பட்டிருக்கும் அரசு பேருந்தை விற்க முயலுவார். கேள்வி கேட்கும் நடத்துநரிடம் இது உங்கள் சொத்துனு எழுதிருக்கில்ல அப்படினு கூறுவார். அது போல் சென்னையில் அரசு பேருந்தை கடத்தி சென்றதும் அமைந்திருக்கிறது.

கோயம்பேடு முதல் அண்ணா சதுக்கம் வரை செல்லும் 27பி பேருந்தை நேற்று முன்தினம் இரவு ஷிப்ட் முடித்து ஓட்டுநர் அண்ணாநகர் பணிமனையில் நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.

இதனால் நேற்று காலை மீண்டும் பணியை தொடங்க ஓட்டுநர் பேருந்தை பணிமனையில் இருந்து வெளியே எடுத்து நிறுத்தினார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் பேருந்தை திடீரென இயக்கி சென்றார். அங்கிருந்த எம்டிசி ஊழியர்கள் இதனை கவனித்து பேருந்தின் பின்னாலையே விரட்டி சென்றனர்.

அந்த மர்ம நபர் பேருந்தை சாலையோரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

அதனை மீட்டு மீண்டும் டிரைவர் ஓட்டி வந்தார். இது குறித்து அண்ணாநகர் எம்டிசி கிளை மேலாளர் அன்பரசு திருமங்கலம் போலீஸில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து சிசிடிவி உதவியை கொண்டு மர்ம நபரை தேடி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.