வீட்டு உரிமையாளர் மனைவி குளிப்பதை செல்போனில் படம் எடுத்த இம்ரான்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
bath video - 2026

மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடுவின் ராஷ்டிரபதி சாலையில் உள்ள வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தவர் இம்ரான்.

இவர் மாடியில் நின்று கொண்டு வீட்டு உரிமையாளரின் மனைவி குளிப்பதை தனது செல்போனில் படம் பிடித்தார். இதை பார்த்த உரிமையாளரின் மனைவி அதிர்ச்சியடைந்து இம்ரானிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து வந்த நஞ்சன்கூடு போலீசார் செல்போனை வாங்கி பரிசோதித்தபோது அதில் வீட்டு உரிமையாளரின் மனைவி குளிக்கும் புகைப்படம் இருந்தது. இதையடுத்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார் இம்ரானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.