வீடுகட்ட முன்பண உச்சவரம்பு 40 லட்சமாக உயர்வு! ஆனந்தத்தில் அரசு ஊழியர்கள்!

Published:

housing-loan
housing-loan

அரசு ஊழியா்கள் வீடு கட்டுவதற்கான முன்பண உச்சவரம்பு ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை செயலாளா் கார்த்திகேயன் பிறப்பித்தார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையில், கட்டிய வீடுகள், அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றைப் பெற விரும்பும் அகில இந்திய குடிமைப் பணியைச் சேர்ந்த அதிகாரிகள் முன்பணமாக அரசிடம் இருந்து பெற வழி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் ரூ.40 லட்சம் வரை முன்பணமாக பெற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்தத் தொகை ரூ.60 லட்சமாக உயா்த்தப்படுகிறது.

இதேபோன்று, தமிழக அரசு ஊழியா்களுக்கான முன்பண உச்சவரம்பு ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.

இந்த முன்பண உச்சவரம்பு உயா்வு உத்தரவானது உடனடியாக அமலுக்கு வருகிறது, இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சங்கங்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதனால் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்ட்ட வழக்குகள் வாபஸ் பெறுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

மறப்போம், மன்னிப்போம்’ என்ற உயரிய கருத்தை மனதில் வைத்து, வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற, அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்டு, வழக்குகள் அனைத்தையும், அரசு கைவிடுவதாகவும், ஒழுங்கு நடவடிக்கைகள் திரும்ப பெறப்படுவதாகவும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது வீடு கட்டுவதற்கான முன்பண உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img