அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேனால் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை தமிழகம்
vankodumai
vankodumai

தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாட்ச்மேன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஆவடியை அடுத்துள்ள அயப்பாக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், திருவேற்காடு ஏரிக்கரையை தெருவைச் சேர்ந்த உதயசூரியன் (வயது 59)வாட்ச்மேனான வேலைபார்த்து வருகிறார்.

பிப்ரவரி 8ஆம் தேதி இரவு அந்த குடியிருப்பு வளாகத்தில் 8 வயது மதிக்கத்தக்க 2 சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, உதயசூரியன் இரு சிறுமிகளிடம் பேசி அழைத்துச் சென்று சிறுமிகள் இருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமிகளின் பெற்றோர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் பிப்ரவரி 9ஆம் தேதி புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து விசாரிக்குமாறு ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் சிறுமிகளிடம் விசாரணை நடத்தியதில், காவலாளி உதயசூரியன் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. உடனடியாக உதயசூரியனை நேற்று போக்சோ சட்டத்தில் கைது செய்து திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.