எல்லாப் புகழும் அம்மாவுக்கே; தன்னைப் புகழந்தவரை அடக்கி வைத்த ஓபிஎஸ்!

Published:

சென்னை:
என்னைப் புகழ்ந்து பேச வேண்டாம்; எல்லாப் புகழும் அம்மாவுக்கே என்று கூறி அடக்கி வைத்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இவ்வாறு இன்று சட்டசபையில் எம்எல்ஏக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழக சட்டசபை இன்று காலை கூடியது. பின்னர் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் 12 பேர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப் பட்டது, தொடர்ந்து ஓக்கி புயலில் உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது. அப்போது, எம்.எல்.ஏ.,க்கள் 2 நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் பேசிய கலசபாக்கம் எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை, ‘ஜல்லிகட்டு நாயகன்’ என்று புகழ்ந்தார். இதற்கு, கேள்வி நேரத்தில் தலைவர்களை பாராட்டக்கூடாது என எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அவைத் தலைவர் அமைதிப்படுத்தினார்ர்.

இதை அடுத்து பேசிய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், என்னை புகழ்ந்து பேச வேண்டாம்; எல்லாப் புகழும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கே! என்று பவ்யமாகக் கூறினார்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

Related articles

Recent articles

spot_img