எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று: ஆண்டாள் கட்டுரை குறித்து வைரமுத்து

சற்றுமுன் சென்னை

சென்னை: தினமணியில் வெளியான கவிஞர் வைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ என்ற கட்டுரைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்மறையான விமரிசனங்கள் எழுந்தன. ஆண்டாள் குறித்து தவறான தகவல்கள் பதிவிடப்பட்டிருப்பதாகவும், இதற்கு வைரமுத்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயரும் வைரமுத்துவின் கட்டுரை குறித்து கருத்துக் கூறியிருந்தார்.இந்த நிலையில், தமிழை ஆண்டாள் கட்டுரை யார் மனதையாவது புண்படுத்துவதாக இருந்தால் அதற்காக வருந்துகிறேன் என்று வைரமுத்து மன்னிப்புக் கோரியுள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வைரமுத்து கூறியிருப்பதாவது:

                              புண்படுத்துவது என் நோக்கமன்று
தமிழை ஆண்டாள் என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன்; அது எனது கருத்தன்று. ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்து. ஆளுமைகளை மேன்மைப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமை செய்வதன்று. அதற்கு இலக்கியமே தேவையில்லை. ஆண்டாளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் என் கருத்துக்களெல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுகின்றன என்பதை அனைவரும் அறிவர்.

எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று; புண்பட்டிருந்தால் வருந்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.