தவறாக நடக்க முயன்றவர் மீது புகார்.. பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்!

Published:

lena - 2026

மின் ஊழியர் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஆனத்தூர் கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லேனா என்ற மகள் உள்ளார். இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு கடந்த 25ஆம் தேதி சென்றுவிட்டு மீண்டும் அவரது வீட்டிற்கு வந்துவிட்டார்.

இந்நிலையில் லேனா ஊருக்கு சென்றிருந்த போது, அப்பகுதியில் வசிக்கும் கந்தசாமி என்ற மின் ஊழியர் வழிமறித்து அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனை அடுத்து திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் இது குறித்து லேனா புகார் அளித்தார்.

அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த கந்தசாமி தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் லேனாவின் வீட்டிற்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

இதனால் மன உளைச்சலில் இருந்த லேனா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து அவரது தந்தை ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லேனாவின் இறப்பிற்கு காரணமான 4 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img