nehru - 2026

திருச்சி மேற்கு தொகுதி உட்பட்ட காவல் நிலையங்களில், காவலர்களின் தபால் வாக்குகளை பெறுவதற்காக, கவர்களில் பணம் வைத்து திமுக வழங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவல் ஆய்வாளர் உட்பட ஆறு பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மேற்குத் தொகுதி உட்பட்ட தில்லை நகர், அரசு மருத்துவமனை, நீதிமன்றம், எடமலைப்பட்டிபுதூர், கண்டோன்மென்ட் உள்ளிட்ட ஆறு காவல் நிலையங்களில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அவர்களின் தகுதிக்கேற்ப 5000 முதல் 2000 வரை கவரில் வைத்து பணம் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காவல் ஆய்வாளர் காவலர்கள் உட்பட 90 க்கும் மேற்பட்ட கவர்களில் பணம் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை திமுகவை சேர்ந்த கே என் நேரு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகவல் அறிந்த காவல் ஆணையர் லோகநாதன் மற்றும் வருமான வருவாய் துறையினர் நடத்திய விசாரணையில், காவல் ஆய்வாளர் சிவக்குமார், எழுத்தாளர் பாலாஜி உள்ளிட்ட 6 பேர் பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் லோகநாதன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

ALSO READ:  மதுரை கோயில் கும்பாபிஷேகம்; நெல்லையில் இருந்து தென்காசி வழி சிறப்பு ரயில்!

இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி க்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பண பட்டுவாடா செய்தது கே என் நேரு தான் என்று திருச்சி மாநகரமே பேசிக்கொண்டு இருக்கும் நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

காவலர்களுக்கு பணம் கொடுக்கும் திமுகவின் இந்த அராஜகப் போக்கு, திருச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending