கொரோனா: என் பெற்றோருக்கு தொற்று.. ட்விட் போட்ட சாந்தனு பாக்யராஜ்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சினிமா சென்னை
purnima
purnima

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவின் முதல் அலையை விட 2வது அலையில் மக்கள் அனைவரும் சிக்கி தவிக்கின்றன.

இதற்காக கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. பொதுமக்கள் தொடங்கி அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே நடிகர் அதர்வா, சூர்யா போன்ற பல பிரபலங்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ், மனைவி பூர்ணிமா பாக்யராஜ் ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் ஷாந்தனு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.