சென்னை விமான நிலையத்தில் 10 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை
gold
gold

துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் கடத்திவந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 200 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியா சிறப்பு விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவரது உடமைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் தீவிரமாக சோதனையிட்டனர்.

அப்போது, பயணி ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரை தனியறைக்கு அழைத்து சென்று, அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, தங்கத்தை உருளை வடிவிலான தகடாக மாற்றி, பழச்சாறு பிழியும் கருவியின் மோட்டாரில் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, அந்த பயணியிடம் இருந்து சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 200 கிராம் தங்க தகட்டினை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, அந்த பயணியிடம் தங்கத்தை யாருக்காக கடத்திவந்தார் என்றும், இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.