மதுரையில் குழந்தைகளை கடத்தி விற்ற சம்பவம்! சிபிசிஐடி., போலீஸ் விசாரிக்கக் கோரி மனு!

Published:

madurai collector office - 2026

மதுரையில் குழந்தைகளை கடத்தி விற்ற சம்பவம் சி.பி.சி. ஐ. டி. போலீஸ் விசாரிக்க கோரி வக்கீல் மனு தாக்கல் செய்துள்ளார்.

மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் வக்கீல். முத்துக்குமார். இவர், மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ்சேகரை சந்தித்து ஒரு மனு அளித்தார். அதில், மதுரை ஆயுத படை குடியிருபில்யில் இயங்கி வரும் இதயம் அறக்கட்டளை நிர்வாகி சிவகுமார் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. 

முதியோர் இல்லத்தை பெயரளவில் நடத்தி வந்து அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளை நம்ப வைத்து இரண்டு மாநில அரசு விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை இந்த சிவகுமார் என்பவர் பெற்றுள்ளார். இந்த விருது பெறுவதற்கும் அவர் ,காவல் துறையுடன் இணைந்து ஆதரவற்ற பிரதேங்களை அடக்கம் செய்வது போல் பல்வேறு புகைப்படங்களை தாக்கல் செய்துள்ளார். 

கொரோனா பேரிடர் கால சூழ்நிலையை இவர் தவறாக பயன் படுத்தி குழந்தைகள் இறந்து விட்டதாக நாடகமாடி போலி அரசு ஆவணங்கள் தயாரித்து குழந்தைகளை விற்று மோசடி செய்துள்ளார்கள். ஆகவே, இதனை மருத்துவம் சார்ந்த தீவிர குற்றமாக கையாள வேண்டும். பல வருடங்களாக திட்டமிட்டு முதியோர், நலிவுற்றோர் மற்றும் ஆதரவற்ற பெண்கள் மீட்பு மையம் என்னும் பெயரில் போலியாக ஆரம்பித்து ஆதரவற்ற குழந்தைகளை கடத்தி விற்று வந்துள்ளார்கள்.

இவர்களின் பின்னால் பெரிய குழந்தைகள் கடத்தும் கும்பல் செயல் பட வாய்ப்பு அதிகம் உள்ளது. இவர்கள் தமிழகம் தவிர பிற மாநிலங்களிலும் குழந்தைகளை விற்பனை செய்திருக்கலாம். காlப்பாக பதிவேடுகளில் 18 குழந்தைகள் இருந்ததாக தெரிய வந்துள்ளது. தற்போது, இரண்டு குழந்தைகள் மட்டுமே கண்டுபிக்க பட்டுள்ள நிலையில் மீதி பதினாறு குழந்தைகளின் நிலை மர்மமாக உள்ளது. 

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த குழந்தைகள் கடத்தி விற்பனை சம்பந்த பட்ட வழக்கில் உள்ளூர் போலீசார் இன்னும் முக்கிய குற்றவாளி சிவகுமாரை கைது செய்ய வில்லை. அவர் ,வெளி மாநிலத்திற்கு தப்பி சென்று இருக்கலாம். எனவே ,இவ்வழக்கில் உள்ளூர் போலீசார் விசாரிப்பதில் சிரமம் உள்ளதால் ,சி. பி. சி. ஐ. டி போலீஸ் விசாரிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். 

மனுவை பெற்று கொண்ட கலெக்டர். உரிய நடவடிக்கைகாக அனீஸ்சேகர் அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img