ஸ்டாலின் படத்தை கையில் வைத்து நிர்வாண வீடியோ! ‘ஆணுறுப்பை அறுத்துடுவேன்..’ வீரலட்சுமி ஆவேசம்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை தமிழகம்
veeralakshmi 1 - 2026

தனக்கு ஆபாச வீடியோ அனுப்பிய நபரை 15 நாட்களில் போலீசார் கைது செய்ய வேண்டும். இல்லையெனில் நானே அந்த நபரின் ஆணுப்பை அறுக்க போகிறேன் தமிழர் முன்னேற்றப்படை நிறுவனர் கி.வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.

ராமாபுரத்தைச் சேர்ந்தவர் கி.வீரலட்சுமி. தமிழர் முன்னேற்றப்படை என்ற அமைப்பின் நிறுவனர் சென்னை பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் ‘மை இந்தியா பார்ட்டி’சார்பில் போட்டியிட்டார்.

கி.வீரலட்சுமி தமிழக சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு அடையாளம் தெரியாத ஒரு மொபைல் எண்ணில் இருந்து ஆபாச வீடியோக்கள் வந்ததாக கூறினார்.

இதையடுத்து அவர் இதுகுறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் புகார் அளித்தார்

மேலும் தனக்கு ஆபாச வீடியோ அனுப்பிய நபரை மூன்று நாட்களில் காவல்துறை கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் நானே அந்த நபரை கண்டு பிடித்து, தூக்கிட்டு வந்து நிர்வாணமாக பல்லாவரம் சந்தையில் கட்டி வைத்து பிறப்புறுப்பை அறுத்து சமூக வலைதலைத்தில் வெளியிடுவேன் என மார்ச் மாதம் வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டார்.

veeralakshmi - 2026

இந்நிலையில் தற்பொழுது மீண்டும் ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கமலேஷ், முனி இருவரும் 15 நாட்களுக்குள் நீங்களே காவல் நிலையத்தில் அல்லது நீதிமன்றத்திலோ போய் சரணடைந்து விடுங்கள் என்னிடமோ அல்லது என்னுடைய தொண்டர்களிடமோ நீங்கள் சிக்கினால் உங்களுடைய ஆணுறுப்பை அறுத்து எரிந்து விடுவோம்.

ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டபோது ஆபாச வீடியோ அனுப்பியதாக சொல்லி சென்னை சென்ட் தாமஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் ஆனால் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்பொழுது பத்து நாட்களுக்கு முன்னால் ஆபாச வீடியோ அனுப்பியதாக கூறி சிட்டி கமிஷனர் அவர்களிடம் புகார் அளித்தேன் ஆனால் அதற்கும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை.

நேற்று கர்நாடகா மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற போது தமிழக முதலமைச்சரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு வீடியோ காலில் நிர்வாணமாக வந்து பேசுறீங்க.

நான் ஒரு கட்சித் தலைவர் எனக்கு அரசியல் பலம் பண பலம் எல்லாம் இருக்கிறது நான் நீதிமன்றத்தில் பணத்தை செலவு செய்து எனக்கான நீதியை பெற்றுக் கொள்வேன்.

ஆனால் சாதாரண ஒரு தமிழ் பெண் இதுபோன்று பாதிக்கப்பட்டால் பணத்தை செலவு செய்து எப்படி அவர்களால் நீதி பெற்றுக் கொள்ள முடியும். எனவே 15 நாட்களுக்குள் இவர்களுடைய ஆணுறுப்பை அறுத்து விடுகிறோம் தமிழக அரசு வீர தீர செயலுக்கான விருது மற்றும் தன்மானத்திற்கான விருதை எனக்கு வழங்க வேண்டும்.

மேலும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையை யூனிபார்மை கழட்டி விட்டு வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.