ராஜபாளையம் அருகே வாழவந்தாள்புரம் பகுதியில் அட்டை மில்லில் கழிவுகள் தீப்பிடித்ததால் கரும்புகை சூழ்ந்துள்ளது. தீயணை வீரர்கள் போராடி தீயை அனைத்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முறம்பு அடுத்துள்ள வாழவந்தாள்புரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான அட்டைமில் இயங்கி வந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த அட்டைமில் இயங்காமல் பூட்டிய நிலையில் இருந்துள்ளது.
இதில் கழிவுகள் மட்டும் ஒரு ஏக்கர் அளவிற்கு கொட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று திடீரென தீப்பிடித்து எரிந்து வருகிறது.
இது குறித்து தகவலறிந்து விரைந்த ராஜபாளையம் தீயணைப்பு துறையினர் தீயை போராடி அனைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த பகுதி தென்காசி மாவட்ட எல்லையில் உள்ளதால் தென்காசி மாவட்டத்தில் இருந்து சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் பகுதியில் இருந்தும் தீயனைப்பு துறையினர் 2 வாகனங்களில் வந்து தீயை அனைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.





