சென்னை பட்டாசுகள் வெடித்ததில், சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதை அருகே புல்வெளியில் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில், விமான ஓடு பாதை அருகே விமானங்கள் வந்து சேரும் போதும் விமானம் கிளம்பிச் செல்லும் போதும் அருகே பறக்கின்ற பறவைகளை அச்சுறுத்தி விரட்டுவதற்காக பட்டாசுகள் வெடிக்கப்படும். இது வழக்கமான செயல்தான். இன்று கோயம்புத்தூரில் இருந்து வந்த தனியார் ஜெட் விமானம் ஒன்று தரை இறங்குவதற்கு முன்பாக இது போன்று பட்டாசு வெடிக்கப்பட்டுள்ளது. அப்போது, விமான ஓடுபாதை அருகே இருந்த காய்ந்த புற்களில் பற்றிய தீ, காற்று பலமாக வீசியதால் வேகமாகப் பரவியது. இதை அடுத்து ஓடுபாதையில் ஜெட் விமானம் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. 3 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்த பின்னர் விமானம் அதன் நிறுத்தப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது என அதிகாரிகள் கூறினர்.
பட்டாசு வெடித்ததில் சென்னை விமான நிலைய ஓடு பாதை அருகே தீ விபத்து
Popular Categories


