விருதுநகரில் ரூ.70.57 கோடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் ..

Published:

IMG 20220915 WA0112 - 2026

விருதுநகர் ரூ.70.57 கோடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கான புதிய கட்டிடத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் கடந்த 1986ல் திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தில் இடப் பற்றாக்குறை உள்ளது. இதனால், நவீன வசதிகளுடன் கூடிய மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் புதிய ஆட்சியர் அலுவலகம்
ரூ. 70.57 கோடி மதிப்பில் ஆறு தளங்களுடன் மொத்தம் 2, லட்சத்து 2, ஆயிரத்து 496 சதுரஅடி பரப்பளவில் கட்டப்படவுள்ளது. இந்த புதிய கட்டடத்திற்கான கட்டிடப் பணிகளை தமிழக முதல்வர் .மு.க.ஸ்டாலின் இன்று காலை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் இவ் வளாகத்தில் வேளாண்மை துறை,
பள்ளிக் கல்வித் துறை ஊரக வளர்ச்சித் துறை
சுகாதாரத்துறை,செய்தி மக்கள் தொடர்புத் துறை,ஊரக வாழ்வாதார இயக்கம்,
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை&
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்
மாவட்டத்தின் சிறப்பு திட்டங்கள்
பொதுப்பணித்துறை சார்பாக அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை முதல்வர் பார்வையிட்டார்.
அதை தொடர்ந்து சிவகாசி பகுதியை சேர்ந்த பாண்டி தேவி என்பவருக்கு அங்கன்வாடியில் பணி நியமன ஆணையை முதல்வர் வழங்கினார்
அப்போது அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் , தங்கம் தென்னரசு எ.வ.வேலு ,அன்பில் மகேஸ் பொய்யா மொழி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாதரெட்டி ,சட்டப்பேரவை உறுப்பினர் ,மக்களவை உறுப்பினர்கள் , அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
முன்னதாக விருதுநகர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தமிழக முதல்வரை, நரிக்குறவர் சமுதாய மக்கள் நேரில் சந்தித்தனர். அப்போது தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்ததற்காக நன்றி தெரிவித்தனர்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img