
புகழ்பெற்ற ராஜபாளைய இன நாய் மற்றும் நாட்டின நாய்களுக்கு உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கால்நடை மருத்துவமனையில் விருதுநகர் மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு நாய்களிடமிருந்து மனிதர்களை வெறி நோய் பாதிப்பை தடுக்கும் பொருட்டு நாய்களுக்கான இலவச வெறி நோய் தடுப்பு ஊசி முகாம் நடைபெற்றது .
இந்த முகாமை ராஜபாளையம் நகர் மன்ற தலைவி பவித்ரா ஷியாம் கலந்து கொண்டு முகாமை துவங்கி வைத்தார் .நிகழ்ச்சியில்
சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா ராஜபாளையம் வட்டாட்சியர் சீனிவாசன் மண்டல துணை வட்டாட்சியர் கோதண்டராமன் ராஜபாளையம் முனிசிபால் நகர் நல அலுவலர் சரோஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
உலக அளவில் ராஜபாளையம் நாய் புகழ்பெற்றதா திகழ்கிறது இதில் ராஜபாளையம் நாய் இனங்கள் மற்றும் கோம்பை கன்னி உள்ளிட்ட நாய்களுக்கும் தெருவில் இருக்கக்கூடிய நாய்களுக்கும் வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டது