கோயிலில் கடையை காலிசெய்ய வந்த செயல் அலுவலரை உள்ளே தள்ளிப் பூட்டிய கடைக்காரர்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் திருச்சி

கும்பகோணம்:
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வீர வசந்த ராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்தை அடுத்து, கோயில்களில் மதிற்சுவர்களை ஒட்டி இருக்கும் கடைகளை காலி செய்து வேறு இடங்களில் மாற்றிக் கொடுக்க தமிழக அரசு ஆணை இட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து அறிவிப்புகளை வெளியிட்டார். இதை அடுத்து, சில இடங்களில் நடவடிக்கை தீவிரமாக எடுக்கப் பட்டது. இதே போன்று, கும்பகோணத்தில் கடையை காலிசெய்ய வந்த கோயில் செயல் அலுவலரை, கடைக்காரர் உள்ளே விடவில்லை. அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் செயல் அலுவலரை அவர் சிறைப் பிடித்தார்.

கடையை குத்தகைக்கு எடுத்திருந்த முருகேசன் என்பவர், தனது கடைக்கு சீல் வைக்க வந்த செயல் அலுவலர் கவிதாவை கடைக்குள் வைத்துப் பூட்டினார். இதனிடையே செயல் அலுவலர் சிறைப் பிடிக்கப் பட்ட

தகவல் அறிந்து வந்த போலீஸார், கோயில் செயல் அலுவலர் கவிதாவை மீட்டனர். இது இன்று காலை கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.