பாளை போலீசுக்கு டிமிக்கி கொடுத்த இளம்பெண் சிக்கினார்

Published:

திருநெல்வேலி: பாளையங்கோட்டை முருகன்குறிச்சியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் வளர்மதி (வயது 32). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக ஸ்டீபன்ராஜ் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகின்றார். திருப்பூருக்கு வேலைக்கு சென்ற வளர்மதிக்கு, தஞ்சாவூரை சேர்ந்த குமரேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அங்கேயே இருந்து விட்டார். மகளை பற்றி எந்த தகவலும் இல்லாததால் முருகன், மதுரை ஐகோர்ட் கிளையில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, வளர்மதியை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டை போலீசாருக்கு உத்தரவிட்டார். இதைதொடர்ந்து வளர்மதி தஞ்சாவூரில் வசிப்பதை அறிந்த பாளை போலீசார் அவரை மீட்டு காரில் அழைத்து வந்தனர். சுவாமிமலை அருகே ஓட்டலில் சாப்பிடும்போது வளர்மதி அங்கிருந்து நைசாக எஸ்கேப் ஆனார். அங்குள்ள பஸ் நிலையத்தில் கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும்போது வளர்மதியை போலீசார் மடக்கி பிடித்தனர்.

Related articles

Recent articles

spot_img