
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரச குடும்பன்பட்டி பொதுமக்கள் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு
அருப்புக்கோட்டை அருகே சூலக்கரை முதல் அரச குடும்பன்பட்டி வரை செல்லும் 3 கி.மீ இணைப்புச் சாலையில் தற்போது புதிதாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது
இந்நிலையில் இந்தச் சாலையின் நடுவே கிராம கணக்கில்
வண்டிப்பாதை என குறிப்பிடப்பட்டுள்ள 600
மீட்டர் இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து சோளம் மற்றும் வாழை பயிர்கள் நட்டு விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது
அங்கு அளவீடு செய்து ஆக்கிரமிப்பு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது அதிகாரிகளின் ஆய்வில் அங்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது
இதனை எடுத்து அங்கு உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசகுடும்பன்பட்டி
பொதுமக்கள் இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் அறிவழகனிடம் மனு அளித்தனர் மனுவை பெற்ற வட்டாட்சியர் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விரைந்து ஆக்கிரமிப்பு அகற்றி சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார்