தமிழக பட்ஜெட்: என்ன சொல்கிறார்கள் விஜயகாந்தும் ராமதாஸும்!

Published:

vijayakanth premalatha - 2026

சென்னை: வரும் 2018-19 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை இன்று நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்து பேசினார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக., நிறுவுனர் ராமதாஸ், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல பினாமி அரசால் முடியாது என்பதை இந்த நிதிநிலை அறிக்கை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. வளர்ச்சிக்கு வழி வகுக்காத இந்த நிதிநிலை அறிக்கையால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை. வளர்ச்சிக்கு வழியில்லை. கடன், வட்டி திவாலுக்கு அழைத்து செல்லும் பட்ஜெட் இது என்று கூறியிருக்கிறார்.

தமிழக அரசின் பட்ஜெட்டில் எந்தவொரு வளர்ச்சி திட்டங்களும் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது என்று கூறியுள்ளார் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த். *பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கிய இந்த பட்ஜெட்டால் தமிழக கடன்சுமை மேலும் அதிகரிக்குமே தவிர, வளர்ச்சியடையாது என்று கூறியுள்ளார் அவர்.

வருவாயை விட, கடன் அதிகமாக இருக்கும் சூழலில், பல திட்டங்களுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது கண்துடைப்பு நாடகம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் பட்ஜெட் குறித்து தெரிவித்துள்ள கருத்தில், க டந்த நிதியாண்டில் அறிவித்த பல திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. சென்னை வெள்ளத்தடுப்புக்கு 2 ஆயிரம் கோடி, பள்ளி கல்வித்துறைக்கு 27 ஆயிரத்து 205 கோடி, என பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அறிவிப்புகளை செயல்படுத்துவது சாத்தியமா என்றும் விஜயகாந்த் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

Related articles

Recent articles

spot_img