போராட்டங்கள் குறித்து ஆளுநரிடம் உரிய விளக்கம் அளித்தோம்: முதல்வர் எடப்பாடி

Published:

edappadi panneerselvam - 2026

தமிழகத்தில் காவிரி தொடர்பில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து ஆளுநரிடம் விளக்கமளித்துள்ளோம். அதில் அவருக்கு திருப்தி ஏற்பட்டதாக ஆளுநர் தெரிவித்தார் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம், நியூட்ரினோ திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அங்குள்ள பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இத்தகைய போராட்டகரமான சம்பவங்களை அடுத்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், செவ்வாய்க்கிழமை தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரைச் சந்தித்தார். இந்நிலையில், தமிழக ஆளுநருடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் புதன்கிழமை இரவு 7:30 மணி அளவில் சந்தித்தனர். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது அமைச்சர் ஜெயகுமார் உடனிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி கூறியதாவது: தமிழகத்தில் நிலவும் காவிரிப் பிரச்னை உள்ளிட்ட போராட்டங்கள் குறித்த நிலவரங்களை கேட்டறியவே ஆளுநர் எங்களை அழைத்தார். தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் குறித்து ஆளுநரிடம் விளக்கமளித்தோம். எங்களுடைய பதில்கள் திருப்திகரமாக இருந்ததாக ஆளுநர் கூறினார். இதில் மறைப்பதற்கு ரகசியங்கள் எதுவும் இல்லை என்று கூறினார்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img