நீட் தேர்வை வைத்து பிண அரசியல் நடத்தாதீர்கள்: திமுக., உள்ளிட்ட கட்சிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டிப்பு

Published:

16 June03 high court - 2026

சென்னை: நீட் தேர்வில் தோல்வியடையும் மாணவர்களின் தற்கொலையை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டு, அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என திமுக., உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மறைமுகமாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருத்திகா என்பவர் கடந்த ஆண்டு  தொடர்ந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி கிருபாகரன், நீட் தேர்வு தோல்வியால் ஏற்படும் மரணங்களைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தேர்வுக்கு முன்பாக உரிய பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகளை சென்ற ஆண்டு பிறப்பித்திருந்தார். அதன் அடிப்படையில் தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. நீட் தேர்வுக்காக இலவசப் பயிற்சி மையம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழக அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்தார். நீட் தேர்வு தொடர்பாக சென்ற ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்ற வில்லை என்றும், அதனால் தான் இந்த ஆண்டும் மாணவிகள் இரண்டு பேர் தற்கொலை செய்ததாகவும் அவர்  அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மாணவர்களுக்கு நீட் தேர்வு தொடர்பாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதையும், தேர்வுகளை மாணவர்கள் எளிதாக அணுக அரசு படிப்படியாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதையும் தெரிவித்தார். மேலும், இவற்றைக் கடந்து எதிர்பாராத விதமாக தற்கொலை சம்பவம் நடைபெறுவதால், அதற்கு அரசு தான் காரணம் என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது எனத் தெரிவித்தார்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

இதைக் கேட்ட நீதிபதி கிருபாகரன், மாணவர்களின் தற்கொலை சம்பவங்களை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என அரசியல் கட்சித் தலைவர்களுக்கு கண்டனம் தெரிவித்தார். மாணவர்களுக்கு முன் கூட்டியே அறிவுரை வழங்காமல், இறந்த பிறகு கண்ணீர் வடிப்பது தேவையற்றது; மாணவர்கள் தற்கொலை சம்பவங்களுக்கு அரசை மட்டும் குறை சொல்லக் கூடாது. இதைத் தடுக்க வேண்டியது சமுதாயத்தில் உள்ள அனைவரின் பொறுப்பு என்று கூறினார்.

தொடர்ந்து, இந்த  மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img