கோவை டூ சேலம்: நடத்துனர் இல்லாப் பேருந்து அறிமுகம்!

Published:

minister mr vijayabhaskar - 2026

கோவையில் இருந்து சேலத்திற்கு புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது நடத்துனர் இல்லாத பேருந்து சேவை என்பது  சிறப்பம்சம்.

நெடுந்தொலைவுக்குச் செல்லும் பேருந்துகள், நடத்துனர் இல்லாமல் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சட்டப் பேரவையில் அறிவித்திருந்ததன் அடிப்படையில்,  கோவையிலிருந்து சேலத்திற்கு நடத்துனர் இல்லாத பேருந்து சேவை இன்று தொடங்கியது.

இந்த வழித்தடத்தில் முதல் கட்டமாக 6 பேருந்துகள் நடத்துனர் இல்லாமல் இயக்கப்படும். பேருந்து நிலையத்தில் இருக்கும் ஒரு நடத்துனர் டிக்கெட் கட்டணத்தை வசூலிப்பார். அதன் பின்னர் புறப்பட்டுச் செல்லும் இந்தப் பேருந்துகள் வழியில் எங்கும் நிற்காது என்பது குறிப்பிடத் தக்கது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img