கொரோனாவால் மரித்தவர் உடலுக்கு இறுதிச் சடங்கு! காலியான காலனி!

corona dead body
corona dead body
  • கொரோனாவால் மரணித்த உடலுக்கு அந்திமக் கிரியைகள்…
  • ஹைதராபாத்தில் காலனி ஒரேடியாக காலியானது.

சில நாட்கள் முன்பு கொரோனாவால் மரணமடைந்த உடல் ஒன்றுக்கு அந்திமக் கிரியைகள் நடத்தினார்கள். அதனால் சிலர் வீட்டை காலி செய்து விட்டார்கள். இன்னும் சிலரும் வேறு இடத்தில் வீட்டுக்காக தேடி வருகிறார்கள் என்று காலனி செகரட்டரி சுதீர் தெரிவித்தார்.

சிகந்திராபாதிலுள்ள பன்ஸிலால்பேட்டையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மூடிவிட்ட மயானத்தை மீண்டும் திறந்த சம்பவம் உள்ளூர்வாசிகள் தீவிரமாக கவலைப்படுவதற்கு வழிவகுத்தது. இதனால் அந்த மயானத்திற்கு அருகில் இருக்கும் அருள்ஜோதி காலனியினர் தம் வீடுகளை காலி செய்து வருகிறார்கள். இன்னும் சிலர் வேறு இடத்தில் வீடுகளைத் தேடி வருகிறார்கள் என்று காலனி செக்ரிடரி தெரிவித்தார்.

ஜூலை எட்டாம் தேதி இந்த காலனி அருகில் உள்ள மயானத்தில் கொரோனா நோயால் மரணம் அடைந்தவரின் உடலுக்கு மின்சார எந்திரத்தின் மூலம் அந்திமக் கிரியைகள் நடத்தினார்கள். அப்போதிலிருந்தே காலனி வாசிகள் தீவிர எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை யன்று காலனி வாசிகள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

உண்மையில் அருள்ஜோதி காலனியில் ஒரு மின்சார மயானம் 4 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. அது காந்தி மருத்துவமனைக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்திலேயே இருக்கிறது. தினமும் 50 உடல்கள் வரை மின்சார மயானம் மூலம் தகனம் செய்யும் வசதி கொண்டது இந்த மயானம். முதலில் தினமும் வரும் உடல்கள் இங்கு மின்சாரம் மூலம் தகனம் செய்து வருகையில் காலனி வாசிகள் மறுப்பு தெரிவித்தனர்.

ஏனென்றால் மின்சார இயந்திரத்தின் மூலம் எரிப்பதால் வெளியிலிருக்கும் சிமினி வழியாக சாம்பல் மற்றும் பிற பொருட்கள் காற்றில் பறந்து தம் வீடுகளின் மேல் விழுகிறது என்றும் துர்வாசனை வருகிறது என்றும் எதிர்ப்பு தெரிவித்ததால் மயானத்தை மூடிவிட்டார்கள். அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் தலையிட்டு அதனை மூடுவதற்கு ஏற்பாடு செய்தார்.

புதிதாக கரோனா நோயால் மரணம் அடையும் உடல்களுக்கு அந்திமக் கிரியைகள் நிர்வகிப்பதற்கு எளிதாக இருக்கும் என்பதால் மூடப்பட்ட இந்த மயானத்தை திறக்க வேண்டும் என்று மருத்துவ அதிகாரிகள் ஜிஹெச்எம்சியை கோரினார்கள். காந்தி மருத்துவமனைக்கு மிக அருகில் இருப்பதால் கரோனா சவங்களின் அந்திமக் கிரியைக்காக மீண்டும் இதனை திறந்தார்கள்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

மூடப்பட்ட மயானத்தில் ஊழியர் ஒருவர் சுத்தம் செய்து கொண்டிருக்கும்போதே சில வாரங்கள் முன்பு நாங்கள் அதை கவனித்தோம். கொரோனா நோயால் இறந்த உடல்களுக்கு இங்கு தகனம் செய்வார்களோ என்று எங்களுக்கு சந்தேகம் வந்தது. நாங்கள் எதிர்பார்த்தபடியே சில நாட்களுக்கு முன்பு ஒரு உடலை எடுத்து வந்து மின்சார மயானத்தில் தகனம் செய்தார்கள். இதனால் சிம்னி வழியாக சாம்பலும் துர்வாசனையும் ஏற்படும் பிரச்சனை மறுபடியும் தலை எடுத்து விட்டது என்று காலனி வாசியான நரசிங்க் கூறினார்.

கரோனா பரவுதல் பற்றி டபுள்யூஹெச்ஓ தினமும் ஒரு புது ஒரு செய்தியைக் கூறி வருகிறது. புதிதாக கோவிட் காற்று மூலம் பரவும் என்று கூறுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் மிக அருகில் உள்ள மயானத்தை திறக்கலாமா என்று மயானத்திற்கு மிக அருகில் வீடு உள்ள ஒருவர் வேதனை தெரிவித்தார்.

ஆனால் கரோனா நோயாளி இறந்தபின் அவருடைய உடலில் வைரஸ் 6 மணி நேரத்திற்கு தாண்டி உயிரோடு இருக்காது என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள். மிக அதிக உஷ்ணத்தில் இறந்த உடலை தகனம் செய்வதால் வைரஸ் கிருமி உயிரோடு இருக்கும் வாய்ப்பே இருக்காது என்று விவரித்தார்கள்.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

உள்ளூர்வாசிகளிடமிருந்து மயான ஊழியருக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படக்கூடாது என்று போலீஸார் பந்தோபஸ்து ஏற்பாடு செய்துள்ளார்கள். காலனி வாசிகள் மட்டும் மயானத்தை மூடவேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories