சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக வந்த நடிகர் ரஜினி காந்த், அவரை நேரில் சந்திக்க இயலவில்லை என்றும், உறங்கிக் கொண்டிருப்பதாகவும் கூறினார். ஆச்சரிய கரமாக, அழகிரி உடன் இருக்கும் முதல் படம் வெளியானது!
கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க வந்திருந்த நடிகர் ரஜினி காந்த், அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், திமுக. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து , ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோரிடம் விசாரித்து ஆறுதல் கூறினேன்.
கருனாநிதியை நான் நேரில் பார்க்கவில்லை. அவர் தூங்கிக் கொண்டிருப்பதாகக் கூறினார்கள். கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன். இந்திய அரசியலில் மூத்த தலைவர் கருணாநிதி என்று கூறினார் ரஜினி.
உடல் நலக் குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதிக்கு ஐந்தாம் நாளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. அவரை அரசியல் தலைவர்கள் பலரும் வரிசையாக வந்து சந்தித்துவிட்டுச் செல்கின்றனர். அவ்வாறு வருபவர்களெல்லாம் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை சந்தித்து நலம் விசாரித்துச் சென்றுவிடுகின்றனர். அவர்கள் இருக்கும் புகைப்படங்களே இதுவரை வெளியாகி வந்தன.
உடன் அழகிரி இருந்தும், எந்த ஒரு புகைப்படத்திலும் அழகிரி இருப்பதாக வெளியாகவில்லை. இந்நிலையில், ரஜினியின் தீவிர ரசிகரான அழகிரி, ரஜியுடன் அமர்ந்து படம் எடுத்துக் கொண்டு அது வெளியாகியுள்ளது.
முன்னதாக, நடிகர் ரஜினி டேராடூனில் இருந்து விமானம் மூலம் இரவு சென்னை வந்தார். அங்கிருந்து காவேரி மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்தார்.






ரஜினி அரசியலà¯à®•à¯à®•௠வராவிடà¯à®Ÿà®¾à®²à¯à®®à¯ அவர௠மீத௠தி.à®®à¯.க. காழà¯à®ªà¯à®ªà¯à®£à®°à¯à®šà¯à®šà®¿ வைதà¯à®¤à¯à®³à¯à®³à®¤à®¾à®²à¯ கரà¯à®£à®¾à®¨à®¿à®¤à®¿à®¯à¯ˆ நேரில௠பாரà¯à®•à¯à®• அனà¯à®®à®¤à®¿à®•à¯à®•விலà¯à®²à¯ˆ எனà¯à®±à¯ மகà¯à®•ளà¯à®•à¯à®•௠தெரியாதா ? இரà¯à®¨à¯à®¤à®¾à®²à¯à®®à¯ அழகிரி அவரை சநà¯à®¤à®¿à®¤à¯à®¤à®¤à¯ வரவேறà¯à®• வேணà¯à®Ÿà®¿à®¯ செயà¯à®¤à®¿.