தமிழகத்தில் அரசு பஸ்கள், ஆட்டோக்கள் இன்று ஓடாது..!

Published:

TNSTC buses indefinite strike - 2026

சென்னை: மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள மோட்டார் தொழில் சார்ந்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மோட்டார் வாகன சட்ட திருத்தம் செய்தால் இத் தொழிலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் மத்திய தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.

சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யு.சி.,உள்ளிட்ட தொழிற் சங்கங்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள எல்.பி. எப்., பாட்டாளி, விடுதலைச் சிறுத்தை, மறு மலர்ச்சி, தே.மு. தி.க. போன்ற சங்கங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றன.

தமிழகத்தில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அரசு போக்குவரத்து, ஆட்டோக்கள், கால் டாக்சிகள் போன்றவை ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img