
சென்னை: திமுக., தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார் பேட்டை காவேரி மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக சிகிச்சையில் உள்ளார். அவரது உடல் நலம் குறித்த அறிக்கை ஒன்றை காவேரி மருத்துவமனை நிர்வாகம் திங்கள் மாலை 6.30 மணி அளவில் வெளியிட்டது.
இந்நிலையில் பொதுமக்களிடையே திடீர் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது. இதனால் பலர், மளிகைக் கடைகள், பால் கடைகளை நோக்கி படை எடுத்தனர்.
வரிசையில் நின்று பால் வாங்கிக் கொண்டு சென்றனர்.
இதனால் பால் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சில இடங்களில் பால் தட்டுப்பாடும் ஏற்பட்டது.
பால் வாங்க மக்கள் வரிசையில் நிற்கின்ற இந்த இடம்: சென்னை R.K நகர், சுண்ணாம்பு கால்வாய் பகுதி.



