மருத்துவர்கள் போராடி வருவதாகவும் தொண்டர்கள் அமைதி காக்குமாறும் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் #ஜெ_அன்பழகன் MLA #வேண்டுகோள்.. விடுத்தார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று கூறிய ஜெ.அன்பழகன் திமுக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முதுமையின் காரணமாக பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். திமுக. தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் வேண்டுகோள் விடுத்தார்.




