சென்னை: உடல் நலம் குன்றி சென்னை ஆழ்வார் பேட்டை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக., தலைவர் கருணாநிதி உடல் நலம் விசாரிப்பதற்காக, நாளை பிரதமர் மோடி காவேரி மருத்துவமணைக்கு வரவுள்ளதாக தகவல் பரவியது. இதை அடுத்து, மருத்துவமனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் காவேரி மருத்துவமனை கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னதாக இன்று காவல் துறை ஆணையர் தலைமையில் காவல் துறையினர் கூட்டம் நடைபெற்றது.
இன்று மாலை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வந்து பார்வையிட்டுச் சென்றார். நேற்று நாட்டின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வந்து ஸ்டாலினிடம் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்துச் சென்றார்.
இந்நிலையில் இன்று கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டு, அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரம் கழித்தே எதுவும் சொல்ல முடியும் என்றும் மருத்துவர்கள் கைவிரித்தனர். இதை அடுத்து, நாளை பிரதமர் மோடி வருகை தரவுள்ளதாக செய்தி பரவியது.





பிரதமர௠வரà¯à®µà®¤à¯ உணà¯à®®à¯ˆà®¯à®¾ ? அலà¯à®²à®¤à¯ வதநà¯à®¤à®¿à®¯à®¾ ?