சென்னை: திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு கனிமொழி, பொன்முடி ஆகியோர் மீண்டும் வந்தனர்.
இரவு 10 மணிக்கு மேல் காவேரி மருத்துவமனையை விட்டு வெளியேறிய கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள், மீண்டும் மருத்துவமனைக்கு இரவு 11.30க்கு மேல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காவேரி மருத்துவமனைக்கு ராசாத்தி அம்மாள், கனிமொழி ஆகியோர் மீண்டும் இரவு 11.30 மணி அளவில் வந்தனர்.
நாஞ்சில் சம்பத் காவேரி மருத்துவமனைக்கு வந்தார். காவேரிக் கரையில் பிறந்த கலைஞர் காவேரி மருத்துவமனையில் காலனோடு போராடுகிறார்.. என்று உருக்கத்துடன் கூறினார் நாஞ்சில் சம்பத்.
தொடர்ந்து காவிரி மருத்துவமனைக்கு திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி வந்தார்.
#Karunanidhi #DMK




