சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் அனுமதிக்கப் பட்டுள்ள திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்த அறிக்கை ஒன்றை இன்று மாலை 6.30.க்கு வெளியிட்டது மருத்துவமனை நிர்வாகம்.
இதை அடுத்து எழுந்த பரபரப்பு, தமிழகம் முழுவதையும் பாதிக்க வைத்தது. தொண்டர்கள் வெவ்வேறு ஊர்களில் இருந்தும் சென்னையை நோக்கிப் படை எடுக்கத் துவங்கியுள்ளனர். தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்யாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் சென்னைக்கு தனியார் பஸ்களை அமர்த்திக் கொண்டு வருகின்றனர்.
இதனிடையே காவேரி மருத்துவமனையில் இருந்த திமுக., செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக மருத்துவமனையை விட்டு வெளியில் சென்றனர். தயாளு அம்மாள், கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.எம்.ஏக்கள் உள்ளிட்ட பலரும் மருத்துவமனையில் இருந்து இரவு 10 மணி அளவில் வெளியேறினர்.




