சென்னை: திமுக., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியான நிலையில், சென்னை உட்பட அனைத்து நகரங்களிலும் போலீசார் குவிக்கப் பட்டிருக்கிறார்கள்.
விடுப்பிலுள்ள போலீசார் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னையில் காவல் துறை அதிகாரிகளுடன் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில், அனைத்து காவல் நிலையங்களிலும் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுப்பில் உள்ள காவலர்கள் பணிக்கு திரும்பவேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரிகளுடன் சென்னை மாநகர காவல் ஆணையர் மேற்கொண்ட ஆலோசனையில், விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 4 மாவட்டத்தைச் சேர்ந்த 12 துணை ஆனையர்களுடன் ஏ.கே.விஸ்வநாதன் ஆலோசனை நடத்தினார். தமிழகம் முழுதும் பாதுகாப்புப் பணியில் சுமார் 1.20 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.




