வைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்!

Published:

vaigai ops - 2026
மதுரை – வைகை அணையிலிருந்து, பெரியாறு பாசனப் பகுதியில் ஒரு போக பாசன நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் ஒரு போக பாசன நிலங்களுக்கும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்ட போது…

வைகை பாயும் ஐந்து மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப் பட்டது. இதனை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னின்று திறந்து வைத்தார்.

வைகை அணையில் நீர்மட்டம் 69 அடியை எட்டிய நிலையில் அணைக்கு வினாடிக்கு 3393 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் 5 மாவட்டங்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அணையின் மொத்த உயரம் 71 அடி. இதில் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால், அணையில் இருந்து நீர் திறந்து விட ஏற்பாடு செய்யப் பட்டது.

இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாசனத்துக்காக இன்று தண்ணீர் திறந்து வைத்தார். நீர் இருப்பைப் பொறுத்து வினாடிக்கு 1130 கன அடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று கூறப்பட்டது.

வைகை அணை நீர் திறந்து விடப் பட்டதன் மூலம் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சத்து ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img