சித்தியடைந்த பேரூர் ஆதினம்! ராம.கோபாலன் சிரத்தாஞ்சலி!

Published:

santhalingar perur - 2026

சென்னை: கோவை பேரூர் மடாலயத்தின் ஆதின கர்த்தராக விளங்கிய சாந்தலிங்க ராமசாமி அடிகள் இன்று தமது 97வது வயதில் சித்தி அடைந்தார். அன்னாரை நினைவு கூர்ந்து தனது சிரத்தாஞ்சலியைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார் இந்து முன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன்.

அவர் தமது சிரத்தாஞ்சலி குறிப்பில், ஆன்மிக ஜோதியாக விளங்கிய பேரூர் ஆதினகர்த்தர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் சித்தியடைந்தார். அவருக்கு இந்து முன்னணியின் சார்பில் சிரத்தாஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆன்மீக பேரொளியை பரப்பிட நமது ஞானியர் பரம்பரை, தொன்று தொட்டு சிவத்தொண்டும், ஆன்மிகத் தொண்டும் செய்தவர தமிழகத்தின் பல பகுதிகளில் ஆதினங்களை, மடங்களை நிறுவினர்.

அந்த ஞான பரம்பரையில் வந்த புகழ்மிக்க பேரூர் ஆதினத்தின் தலைவராக இருந்து அருள் வழிகாட்டி வந்தவர்  சீர்வளர்சீர் பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அவர்கள். அவர் இன்று சிவனடியை அடைந்துள்ளார்.

சுவாமிகள், இந்து சமுதாயத்தின் மீது தீராத அன்பு கொண்டவர். கோவை மண்டலத்தில் ஆன்மீக பணிக்கு உற்ற துணையாக விளங்கியவர். காலம்காலமாக, சீரிய ஆன்மீகப் பணியை செய்து வரும் பேரூர் ஆதினத்தின் பெருமைக்கு பெருமை சேர்த்தவர்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

திருக்கயிலாயமரபு மெய்கண்டார் வழிவழி பேரூர் ஆதீன மகா சன்னிதானம் சீர்வளர்சீர் இராமசாமி அடிகளார் அவர்கள் சிவபதம் அடைந்ததற்கு, இந்து முன்னணி சிரத்தாஞ்சலியை செலுத்துகிறது. – என்று குறிபிட்டுள்ளார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img