IMG 20180911 193804 - 2026நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள கோவில் அருகில் உள்ள பழமையான மருத மரம் அடியோடு சாய்ந்து கீழே விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தென்தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.

IMG 20180911 WA0115 - 2026இந்த கோவில் முன்பு சுமார் 100 ஆண்டுகள் பழமையான மருத மரம் உள்ளது. இந்த மரம் இன்று மதியம் ஒரு மணி அளவில் திடீரென்று கீழே முறிந்து விழுந்தது.

இதனால் மரத்தடியில் நிறுத்தப்பட்டிருந்த பைக், நடைபாதைக் கடைகள் சேதமடைந்தன. ஒரு பெண், குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மரம் முறிந்து விழுந்த இடத்தில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்ததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது

IMG 20180911 WA0116 - 2026பின்னர் போலீசார் மற்றும் கோவில் ஊழியர்கள் சேர்ந்து மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் சுமார் 3 மணி நேரமாக ஈடுபட்டனர்.

பாபநாசம் கோவில் முன்பு இருந்த மரம் திடீரென விழுந்ததால் அதை அபசகுனமாக பக்தர்கள் கருதுகின்றனர்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending