வேலூர்: வேலூர் தலைமை பத்திரப்பதிவு துறை அலுவலகம் புரோக்கர்கள் பிடியில் !கண்டு கொள்ளாத அதிகாரிகள் மற்றும் அமைச்சர் தலைவிரித்து ஆடும் ஊழல்.!
வேலூர் என்றாலோ வெயிலுக்கும் ஜெயிலுக்கும் பெயர் போன ஊர். இந்தியாவின் முதல் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தி ஊர். தென் இந்தியாவின் பெறக்கோயில் இப்படி பல பெருமை மிக்க ஊர் என்ற அந்தஸ்தை பெற்று விளங்கி வருகிறது.
இப்படி பல சிறப்புப் பட்டம் பெற்ற ஊர் இன்று லஞ்சம் வாங்கும் பட்டியலில் முதல் இடத்தை கூடிய விரைவில் பிடிக்கும் காரணம் வேலூர் மாவட்டத்தின் தலைமை பத்திரப் பதிவு துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் நிலம், திருமண பதிவு, சங்கங்கள் பதிவு, போன்ற பதிவுகள் செய்யபட்டு வருகின்றது. இங்கு செய்யபடும் அனைத்து பத்திரப்பதிவுகளும் புரோக்கர்கள் இல்லாமல் நடப்பது இல்லை குறிப்பாக பொதுமக்களுக்கு சமுக சேவை செய்ய ஒரு சில சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி புதிதாக ஒரு சங்கம் பதிவு செய்ய புரோக்கர்கள் துனை இல்லாமல் எந்த வேலையும் நடைபெறுவதில்லை. காரணம் லஞ்சம் தலை விரித்தாடுகிறது.
அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தாலும் இது சரியில்ல அது சரியில்லை என அழைக்கின்றனர்.
இது குறித்து அங்கு இருந்த நபர் ஒருவர் கூறுகையில். இங்கு எந்த பதிவுகள் வந்தாலும் புரோக்கர்கள் இல்லாமல் நடக்காது. நீங்கள் நேரடியாக சென்றால் ஆவணங்கள் சரியில்லை என்று திருப்பி விடுவார்கள்.
நீங்கள் ஒரு புரோக்கர் மூலம் செல்லுங்கள் உங்கள் பணி விரைவாக முடிந்துவிடும் என்று கூறினார். தமிழக பத்திரப்பதிவு துறை அமைச்சர் வீரமணியின் சொந்த மாவட்டத்தில் தினந்தோறும் இப்படி பொதுமக்கள் அலைக்கழிப்பு செய்யபடுகிறது.
ஊழலில் மிதக்கும் வேலூர் மாவட்ட தலைமை பத்திரப் பதிவு அலுவலகத்தை உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை நடக்குமா? இல்லை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பெருத்து இருந்தது பார்ப்போம்.




