சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்ட வேண்டும்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

chennai central railway station - 2026

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரைச் சூட்ட வேண்டும் என்றும், இதற்காக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது குறித்தும் சமீபத்தில் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவும் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு இன்று எழுதிய கடிதத்தில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் என பெயர் சூட்ட வேண்டும்; இதுகுறித்து பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார். அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.