ஸ்ரீரங்கம் கோயில் முன் பணியாளர்கள் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்! பாஜக., பிரமுகருக்கு அடி உதை! பக்தர்கள் கோபம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் திருச்சி புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
srirangam temple jeyaraman - 2026
ஸ்ரீரங்கம் கோயில் முன் அறநிலையத்துறை ஊழியர்கள் அனுமதியின்றி நடத்திய போராட்டத்தால் பக்தர்கள் அவதி!

திருச்சி: ஸ்ரீரங்கம் கோவில் செயல் அலுவலர் ஜெயராமன் தலைமையில் கோயில் பணியாளர்கள் ஹெச்.ராஜாவை கண்டித்து அனுமதியின்றி போராட்டம் நடத்தினர்.

கோயில் வாசலை மறித்து அறநிலையத்துறைப் பணியாளர்கள் நடத்திய இந்தப் போராட்டத்தால் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். அப்போது அங்கு பாஜக.,வின் திருச்சி மாவட்ட முன்னாள் ராணுவப் பிரிவு தலைவர் எஸ்.நடராஜன், குடும்பத்துடன் புரட்டாசி மாத வழிபாட்டிற்கு வந்தார். அவர், இந்தப் போராட்டம் குறித்து முணுமுணுத்துக் கொண்டே சென்றுள்ளார். ரெங்கா ரெங்கா கோபுர வாசலில் அவர் சென்றபோது ஜெயராமனுடன் இருந்தவர்கள் அதோ பாஜக., காரர்கள் என்று அவர் மீது பாய்ந்துள்ளனர்.

இதை அடுத்து நடராஜன், ஹெச்.ராஜா தவறாகப் பேசி இருந்தால் போலீஸாரிடம் அனுமதி வாங்கி முறையாக போராட்டம் நடத்த வேண்டியது தானே! கோவில் பணியாளர்கள் கோவிலில் வேலை பார்க்காமல் சட்டவிரோதமாக காவல்துறை அனுமதியின்றி கோவில் வாசலில் கூடவேண்டிய அவசியம் எதற்கு? என கேட்டுள்ளார்.

srirangam temple jeyaraman2 - 2026
ஸ்ரீரங்கம் கோயில் முன் அறநிலையத்துறை ஊழியர்கள் அனுமதியின்றி நடத்திய போராட்டத்தால் பக்தர்கள் அவதி!

கோவிலில் அதிகாரி ஜெயராமனுக்கு துணையாக அடியாட்களாக ஓய்வு  பெற்ற விஏஓ.,  சூசி என்கிற சுதர்சன் ஆகியோர் வலம் வருவதாகவும், அவர்கள் திடீரெனப் பாய்ந்து  நடராஜனைத் தாக்கியுள்ளனர் என்று கூறப் படுகிறது. அப்போது அங்கிருந்த காவல்துறையினர் நடராஜனை பத்திரமாக மீட்டு அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.  நடராஜன் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஜெயராமன் உதவியாளர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தில் நடந்த இந்தச் சம்பவங்கள் பக்தர்கள் மனத்தில் பெரும் வருத்தத்தையும் ஆவேசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

1 thought on “ஸ்ரீரங்கம் கோயில் முன் பணியாளர்கள் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்! பாஜக., பிரமுகருக்கு அடி உதை! பக்தர்கள் கோபம்!”

  1. ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செயல் தலைவரா ? அல்லது ரௌடிகளுக்கு தலைவரா இந்த ஜெயராமன் ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.