மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாத விசாக நட்சத்திர, மூன்று கிரகங்கள் இணைந்த ஆலயத்தில் அக். 4. ம் தேதி வியாழக்கிழமை இரவு 7. 40. மணிக்கு குருப்பெயர்ச்சி மகாயாகம், குரு ப்ரீதி ஹோமங்கள் நடைபெறுகின்றன.
இரவு 7.40க்கு தொடங்கி இரவு 10.10க்கு மகா யாகம் முடிவடைகிறது. குருபகவான் அக். 4ஆம் தேதி வியாழன் இரவு 10.05. மணிக்கு விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதையொட்டி குரு பகவானுக்கு சிறப்பு அபிசேகங்களும், மேசம் , மிதுனம்..கும்பம்..கன்னி.. விருச்சிகம்..மகம்..ராசி நேயர்களுக்கு பரிகார அர்ச்சனைகள் நடைபெறுகிறது.
இதற்கான, ஏற்பாடுகளை, ஆலயத் தக்கார் சுசிலாராணி, கணக்கர் சி. பூபதி.. எழுத்தர் வசந்த்.. தொழிலதிபர் எம. மணி.. பள்ளித்தாளாளர் டாக்டர் எம். மருதுபாண்டியன் மற்றும் ஆலயப் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.




