திம்பம் மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த லாரி

Published:

lorry thipam - 2026

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி தலை கீழாகக் கவிழ்ந்து அந்தரத்தில் தொங்குவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் – கர்நாடக மாநிலத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு பகுதியிலிருந்து கல் பாரம் ஏற்றிய லாரி சேலம் செல்வதற்காக திம்பம் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தது. லாரியை திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த ஓட்டுநர் பெரியசாமி ஓட்டினார்.

lorry thipam2 - 2026

இன்று அதிகாலை லாரி 9 வது கொண்டைஊசி வளைவில் திரும்பும்போது பிரேக் பழுது ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு பள்ளத்தாக்கில் உள்ள மரத்தில் மோதி தலைகீழாக தொங்கியது. இதையறிந்த ஓட்டுநர் பெரியசாமி கீழே குதித்து உயிர்தப்பினார்.

இருப்பினும் ஓட்டுநருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக 12 மற்றும் 16 சக்கர லாரிகள் தவிர்த்து மற்ற அனைத்து வாகனங்களும் மலைப் பாதையில் அனுமதிக்கப்பட்டன!

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

Related articles

Recent articles

spot_img